கட்டிட மேற்பார்வையாளர் தற்கொலை
தந்தை இறந்த சோகத்தில் கட்டிட மேற்பார்வையாளர் தற்கொலை செய்து கொண்டார்.
சேலம்
சேலம் நரசோதிப்பட்டி பகுதியை சேர்ந்த மணி மகன் சபரிநாதன் (வயது 26). கடந்த 2 மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் சபரிநாதனின் தந்தை மணி இறந்துவிட்டார். இதனால் சபரிநாதன் மிகுந்த சோகத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் அவர் வீட்டிற்கு மது அருந்திவிட்டு வந்துள்ளார். பின்னர் அவர் வீட்டில் உள்ள ஒரு அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த சூரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, சபரிநாதனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தந்தை இறந்த சோகத்தில் சபரிநாதன் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே கடந்த 4 நாட்களுக்கு முன்புதான் சபரிநாதனுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.