கஞ்சாவுடன் முதியவர் கைது

தளவாய்புரத்தில் கஞ்சாவுடன் முதியவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-07-25 19:13 GMT
தளவாய்புரம், 
தளவாய்புரம் மாஞ்சோலை காலனி பகுதியை சேர்ந்த காளிமுத்து (வயது 70) என்பவர் தனது வீட்டில் கஞ்சா வைத்து விற்பனை செய்வதாக தளவாய்புரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தளவாய்புரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லவகுசன் தலைமையில் போலீசார்  காளிமுத்து வீட்டில் சோதனை செய்ததில் ஒரு கிலோ 300 கிராம் கஞ்சா விற்பனை செய்ய பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்