மூதாட்டி வீட்டில் நகை திருடியவர் கைது
மூதாட்டி வீட்டில் நகை திருடியவர் கைது
மதுரை
மதுரை ஆரப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் லார்டுவின். இவருடைய மனைவி ஸ்டெல்லா(வயது 70). இவர் பீரோவில் வைத்திருந்த 7 பவுன் நகையை காணவில்லை. இதுகுறித்து ஸ்டெல்லா அளித்த புகாரின் பேரில் கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில், ஸ்டெல்லா வெளியூர் செல்லும் போதெல்லாம், வீட்டு சாவியை அதே பகுதியை சேர்ந்தத ஸ்ரீநாத் என்பவரிடம் கொடுத்து செல்வது வழக்கம். இதை பயன்படுத்தி ஸ்ரீநாத் வீடு புகுந்து பீரோவில் இருந்த நகைகளை திருடியது தெரியவந்தது. கரிமேடு போலீசார் ஸ்ரீநாத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.