ஆற்காடு அருகே நின்றிருந்த லாரி மீது வேன் மோதி கிளீனர் பலி

நின்றிருந்த லாரி மீது வேன் மோதி கிளீனர் பலி

Update: 2021-07-25 16:57 GMT
ஆற்காடு

சென்னையில் இருந்து வேலூர் நோக்கி நேற்று அதிகாலை ஒரு கன்டெய்னர் லாரி வந்துகொண்டிருந்தது. அறிவழகன் என்பவர் லாரியை ஓட்டி வந்துள்ளார். ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் தனியார் மருத்துவமனை அருகே வரும்போது லாரி பழுதாகி சாலையின் ஓரமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பின்னால் வந்த வேன் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியது.

இதில் வேன் டிரைவர் சென்னையை சேர்ந்த வினோத், வேலூரைச் சேர்ந்த கிளீனர் ரவிச்சந்திரன் (வயது 55) ஆகிய இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரவிச்சந்திரன் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் ஆற்காடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்