சங்கராபுரம் அருகே கிணற்றில் விழுந்த டிராக்டர் மீட்பு

சங்கராபுரம் அருகே கிணற்றில் விழுந்த டிராக்டர் மீட்பு டிரைவர் உள்பட 2 பேர் படுகாயம்

Update: 2021-07-25 16:46 GMT
சங்கராபுரம்

சங்கராபுரம் அருகே உள்ள சேஷசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த இளங்கோவன் மகன் சங்கர். டிராக்டர் டிரைவரான இவர் நேற்று முன்தினம் அதே ஊரில் உள்ள நிலத்தை உழுதுவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அதே கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் அய்யப்பனும் டிராக்டரில் இருந்தார். செல்லம்பட்டு ரோடு அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் சாலையோரம் உள்ள தனியாருக்கு சொந்தமான 40 அடி ஆழ கிணற்றில் விழுந்தது. இதில் டிரைவர் சங்கர், அய்யப்பன் ஆகியோரும் கிணற்றில் விழுந்து படுகாயம் அடைந்தனர்.  

இதுபற்றிய தகவலறிந்து வந்த சங்கராபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர்(பொறுப்பு) சிவக்குமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் டிராக்டருடன் சங்கர், அய்யப்பன் ஆகியோரை மீட்டனர். பின்னர் அவர்கள் இருவரும் கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கிணற்றில் டிராக்டர் விழுந்த சம்பவத்தால் சேஷசமுத்திரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்