திருவெண்ணெய்நல்லூர் அருகே ரேஷன் அரிசியை பதுக்கிய மூதாட்டி கைது

திருவெண்ணெய்நல்லூர் அருகே ரேஷன் அரிசியை பதுக்கிய மூதாட்டி கைது செய்யப்பட்டாா்.

Update: 2021-07-25 16:17 GMT
அரசூர், 

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள பேரங்கியூர் ஒத்தவாடை தெருவை சேர்ந்தவர் சாமிக்கண்ணு மனைவி ஜெயலட்சுமி (வயது 70). இவர்கள் சிலரிடம் ரேஷன் அரிசியை வாங்கி பதுக்கி வைத்திருப்பதாக திருவெண்ணெ்நல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

 அதன்பேரில், இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) காமராஜன், சப்-இன்ஸ்பெக்டர் குருபரன் மற்றும் போலீசார் விரைந்து சென்ற போது, தலா 50 கிலோ எடை உள்ள 30 மூட்டை ரேஷன் அரிசியை விற்பனைக்காக மினி லாரியில் ஏற்றி செல்ல முயன்றது தெரியவந்தது.

இதையடுத்து, லாரி மற்றும் அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் ஜெயலட்சுமியை பிடித்து  விழுப்புரம் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் கல்பனா  வழக்குப்பதிவு செய்து, ஜெயலட்சுமியை கைது செய்து விசாரித்து வருகிறார்.

மேலும் செய்திகள்