வடமாநில தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை

வடமாநில தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை

Update: 2021-07-25 11:40 GMT
திருப்பூர்
திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். கொரோனா பாதிப்பின் காரணமாக ஊரடங்கு விதிக்கப்பட்டு கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அதன்படி கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை திருப்பூரில் பனியன் நிறுவனங்கள் மூடப்பட்டன.
இதன் பின்னர் தளர்வின் காரணமாக தற்போது செயல்பட்டு வருகின்றன. இதனால் வேலை தேடி வடமாநிலங்களில் இருந்து திருப்பூருக்கு தொழிலாளர்கள் பலரும் வந்து கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு வருகிறவர்களினால் திருப்பூரில் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளது. இதனால் ரெயில் நிலையத்திலேயே வைத்து வடமாநிலங்களில் இருந்து வருகிறவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யும் பணி மாநகராட்சி சார்பில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்