பள்ளிப்பட்டு அருக ரூ.25 லட்சம் ஆக்கிரமிப்பு அரசு நிலம் மீட்பு - வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை

பள்ளிப்பட்டு அருகே ரூ.25 லட்சம் மதிப்புள்ள ஆக்கிரமிப்புக்கு உள்ளான அரசு நிலத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் அதிரடியாக மீட்டனர்.

Update: 2021-07-25 00:41 GMT
பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா கிருஷ்ணராஜகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்ன முனுசாமி. இவரது மகன் நாதமுனி. இவர் அதே கிராமத்தில் உள்ள குட்டை வாய்க்கால் சாலை வகைப்பாடு கொண்ட 29.5 ஏக்கர் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து அதில் மாங்கன்றுகளை நட்டு முள்கம்பி வேலி அமைத்து ஆக்கிரமித்துக் கொண்டதாக தெரிகிறது.

இதுகுறித்து வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவின் பேரில், திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் சத்யா ஆலோசனைப்படி பள்ளிப்பட்டு தாசில்தார் கதிர்வேல் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு போலீசாருடன் சென்றனர்.

அங்கு நாதமுனி அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து அதில் மாங்கன்றுகளை நட்டு வைத்து அந்த இடத்தை சுற்றி முள்வேலி அமைத்து ஆக்கிரமிப்பு செய்திருந்தது உறுதியானது. இதை கண்ட அதிகாரிகள் பொக்லைன் எந்திரத்தின் மூலம் அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி ரூ.25 லட்சம் மதிப்புள்ள அரசு நிலத்தை மீட்டனர்.

மேலும் செய்திகள்