கன்னியாகுமரி பாதிரியாரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யக்கோரி - பா.ஜனதா கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
கன்னியாகுமரி பாதிரியாரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யக்கோரி பா.ஜனதா கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
திருவள்ளூர்,
பிரதமர் மோடி குறித்து அவதூறாக கருத்து தெரிவித்த கன்னியாகுமரியை சேர்ந்த பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை கண்டித்து திருவள்ளூரில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை அருகே திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாரதீய ஜனதா கட்சி சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பா.ஜ.க.வின் திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச் செயலாளர்கள் கருணாகரன், சீனிவாசன், அஸ்வின் குமார், மாவட்ட செயலாளர் ஆர்யா சீனிவாசன், திருவள்ளூர் நகர தலைவர் சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் திரளான பா.ஜனதா கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு பிரதமர் மோடி குறித்து அவதூறாக கருத்தை தெரிவித்த பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்டன கோஷங்களை எழுப்பினர்.