குமரியை சேர்ந்த பங்குதந்தை கைது
பிரதமர் மோடி பற்றி அவதூறாக பேசிய குமரியை சேர்ந்த பங்குதந்தையை போலீசார் கைது செய்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். அவரை 15 நாள் காவலில் ைவக்க மாஜிஸ்திேரட்டு உத்தரவிட்டார்.
நாகர்கோவில்:
பிரதமர் மோடி பற்றி அவதூறாக பேசிய குமரியை சேர்ந்த பங்குதந்தையை போலீசார் கைது செய்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். அவரை 15 நாள் காவலில் ைவக்க மாஜிஸ்திேரட்டு உத்தரவிட்டார்.
சர்ச்சைக்குரிய கருத்து
குமரி மாவட்டம் அருமனையில் கிறிஸ்தவ இயக்கம் சார்பில் கடந்த 18-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பங்குதந்தை ஜார்ஜ் பொன்னையா சர்ச்சைக்குரிய வகையில் சில கருத்துகளை கூறியிருந்தார். பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் பா.ஜனதா எம்.எல்.ஏ. எம்.ஆர்.காந்தி ஆகியோரை விமர்சித்ததோடு தி.மு.க. அமைச்சர்கள் சேகர்பாபு, மனோ தங்கராஜ் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்ததாக தெரிகிறது. அதோடு இந்து கடவுள்கள் பற்றியும், தி.மு.க. வெற்றி பெற்றது குறித்தும் அவர் தெரிவித்த கருத்து பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதை தொடா்ந்து பங்குதந்தை ஜார்ஜ் பொன்னையா கருத்துக்கு பா.ஜனதா மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்ததோடு போராட்டங்களையும் நடத்தியது. அதே சமயத்தில், குழித்துறை மறை மாவட்ட ஆயரும், தமிழக ஆயர் பேரவை தலைவருமான அந்தோணி பாப்புசாமியும், ஜார்ஜ் பொன்னையாவின் அவதூறு பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தார். இதற்கிடையே பங்குதந்தை ஜார்ஜ் பொன்னையா தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து வீடியோ வெளியிட்டார்.
பங்குதந்தை கைது
மேலும் அவதூறாக பேசிய பங்குதந்தை ஜார்ஜ் பொன்னையா உள்பட 3 பேர் மீது அருமனை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதாவது மத உணர்வுகளை புண்படுத்துதல், அவதூறு பரப்புதல், கொலை மிரட்டல், சட்ட விரோதமாக கூடுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால் போலீஸ் தேடுவதை அறிந்த பங்குதந்தை ஜார்ஜ் பொன்னையா தலைமறைவானார்.
வெளி மாவட்டத்துக்கு தப்பிச் சென்றது தெரியவந்தது. இந்த நிலையில் நேற்று காலையில் மதுரை மாவட்டம் சிலைமான் போலீசார் கருப்பாயூரணி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அந்த வழியாக வந்த காரை மறித்து சோதனை செய்தனர். அப்போது காரில் இருந்தவர் போலீசாரால் தேடப்பட்டு வந்த பங்குதந்தை ஜார்ஜ் பொன்னையா என்பது தெரியவந்தது. அதை தொடர்ந்து அவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
சிறையில் அடைப்பு
பங்குதந்தை சிக்கிய விவரம் உடனடியாக குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணனுக்கு தெரிவிக்கப்பட்டது. பின்னர் அவரை குமரி மாவட்டத்துக்கு அழைத்து வந்தனர். முதலில் ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டு, பங்குதந்தை ஜார்ஜ் பொன்னையாவிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணைக்கு பிறகு அவரை குழித்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டனர். இதனால் கோர்ட்டு முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மாலையில் பங்குதந்தை ஜார்ஜ் பொன்னையா மாஜிஸ்திேரட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது அவர் தரப்பில் ஆஜரான வக்கீல், பங்குத்தந்தை ஜார்ஜ் பொன்னையாவை ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும், ஜாமீன் வழங்க கோரியும் மனு செய்தார். அதை மாஜிஸ்திரேட்டு செல்வம் ஏற்க மறுத்து, 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். பின்னர் அவர் ெநல்ைல பாைளயங்ேகாட்ைட சிறையில் அடைக்கப்பட்டார்.