திருப்பத்தூரில் இருந்து கல்லலுக்கு புதிய பஸ் வசதி

திருப்பத்தூரில் இருந்து கல்லலுக்கு புதிய பஸ் வசதியை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

Update: 2021-07-24 19:43 GMT
திருப்பத்தூர்,

திருப்பத்தூர் அரசு பஸ் கிளை பணிமனையில் இருந்து இயக்கப்படும் புதிய பஸ் காலை 11-20 மணிக்கும், மாலை 3.10- மணிக்கும் திருப்பத்தூர் பஸ் நிலையத்திலிருந்து புறப்படுகிறது. இந்த பஸ் கண்டரமாணிக்கம், வெளியாத்தூர் விலக்கு, பட்டமங்கலம், கருங்குளம், நரியங்குடி, கோட்டுத்துரைப்பட்டி, கத்தாளம்பட்டு, சின்ன ஓலைக்குடிப்பட்டி, பெரிய ஓலைக்குடிப்பட்டி, முத்தனங்கோட்டை, சொக்கநாதபுரம், செம்பனூர் வழியாக கல்லலுக்கு செல்கிறது. தினமும் 2 முறை இயக்கப்படுகிறது.
இந்த புதிய பஸ் சேவையை நேற்று ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இந்த வழித்தடத்தில் அரசு பஸ் சென்றது. ஆனால் சாலை பழுதானதால் பஸ் நிறுத்தப்பட்டது. அதன்பிறகு பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததன் பேரில் தற்போது இந்த வழித்தடத்தில் பஸ் விடப்பட்டு உள்ளது. நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் குன்றக்குடி சுப்பிரமணியன், விராமதி மாணிக்கம், சண்முகவடிவேல் காளையார்கோவில் கென்னடி, ஒன்றிய துணைச்செயலாளர் நெடுமரம் இளங்கோ, முன்னாள் பேரூராட்சி சேர்மன் சாக்ளா, ஊராட்சி மன்ற தலைவர் செல்வராஜ், கவுன்சிலர் ராமலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கிராம மக்கள் அரசுக்கும், அமைச்சருக்கும் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்