கேந்தி விளைச்சல் குறைவு
சேத்தூர் அருகே கேந்தி விளைச்சல் குறைவால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
தளவாய்புரம்,
சேத்தூர் அருகே கேந்தி விளைச்சல் குறைவால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
கேந்தி சாகுபடி
சேத்தூர் அருகே அசையாமணி விளக்கு, தேவதானம், சொக்கநாதன் புத்தூர், கணபதி சுந்தரநாச்சியாபுரம் ஆகிய பகுதியில் இந்த ஆண்டு ஏராளமான விவசாயிகள் கேந்தி சாகுபடி செய்துள்ளனர். இந்தநிலையில் இங்கு தற்போது புழுக்களின் தாக்கத்தால் கேந்தி விளைச்சல் குறைவாக உள்ளதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதுபற்றி விவசாயிகள் விஜய கிருஷ்ணன், தர்மராஜா ஆகியோர் கூறியதாவது:-
நாங்கள் அசையாமணி விளக்கு பகுதியில் கேந்தி பூ சாகுபடி செய்துள்ளோம். இதனை சாகுபடி செய்த 50-வது நாளில் இருந்து பூ மகசூல் கிடைக்க தொடங்கியது.
மகசூல் குறைவு
இங்கு 3 நாட்களுக்கு ஒருமுறை பூக்களை பறிப்பது வழக்கம். தற்போது புழுக்களின் தாக்கத்தால் மகசூல் வெகுவாக குறைந்து விட்டது.
இந்தப்பூ நன்றாக இருந்த போது முன்பு கிலோ ரூ.50 வரை விலை போனது. தற்போது இந்த புழுக்களின் தாக்கத்தால் கிலோ ரூ.30-க்கு விலை போகிறது. இதனால் எங்களுக்கு நஷ்டம்தான் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.