வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி
விளாத்திகுளம் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலியானார்.
விளாத்திகுளம்,
விளாத்திகுளம் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலியானார்.
மூதாட்டி
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள துளசிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் காளியம்மாள் (வயது 80). இவர் தனது மகன்களுடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் காளியம்மாள் வீட்டை இடித்து விட்டு, புதிய வீடு கட்டும் பணி நடந்து வருகிறது. சம்பவத்தன்று பொக்லைன் எந்திரம் மூலம் வீட்டை இடிக்கும் பணி நடந்தது. அப்போது, வீட்டில் இருந்த பொருட்களை எடுப்பதற்காக காளியம்மாள் வீட்டிற்குள் சென்றார். அந்த சமயத்தில் வீட்டின் சுவர் இடிந்து அவர் மீது விழுந்தது. இதில் காளியம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்த விளாத்திகுளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காளியம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.