கஞ்சா விற்ற 5 பேர் கைது

ராணிப்பேட்டை, ஆற்காடு, அரக்கோணத்தில் கஞ்சா விற்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-07-24 16:49 GMT
சிப்காட் (ராணிப்பேட்டை)

ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் எமரால்டு நகரை சேர்ந்தவர் பிரபாகர் (வயது 26). இவர் நேற்று ராணிப்பேட்டை முத்துக்கடை பகுதியில் கஞ்சா விற்பதற்காக வைத்துக் கொண்டிருந்தார். 

இவரை ராணிப்பேட்டை போலீசார் கைது செய்தனர். இதேபோல் வாணாபாடி கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் (48). வாணாபாடியில் கஞ்சா விற்றுக்கொண்டிருந்தார். இவரை சிப்காட் போலீசார் கைது செய்தனர்.

அதேபோல் ஆற்காடு அருகே ரத்தினகிரி போலீசார் கஞ்சா விற்ற மாங்குப்பம் பகுதியை சேர்ந்த விஜய் (22) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.  

மேலும் அரக்கோணம் எஸ்.ஆர்.கேட் பகுதியில் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிதரன், சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாமலை மற்றும் போலீசார் கஞ்சா விற்ற அரக்கோணம் சாய் நகரை சேர்ந்த மணிகண்டன் (21), கிருபில்ஸ்பேட்டையை சேர்ந்த பிரேம்குமார் (27) ஆகியோரை கைது செய்து, அவர்களிடம் இருந்த 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். 

மேலும் வாலாஜாபேட்டையை சேர்ந்தவர் மணி (65). கீழ் வேலம் பகுதியை சேர்ந்தவர் மணியரசு (36). இவர்கள் 2 பேரும் நேற்று தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்றுக் கொண்டிருந்தனர். இவர்களை  ராணிப்பேட்டை போலீசார் கைது செய்தனர். 

வாலாஜாவை அடுத்த கோவிந்தசேரி குப்பத்தை சேர்ந்த சாந்தகுமார் (32). என்பவர் நேற்று ராணிப்பேட்டை பாலாறு பாலம் அருகே பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டிருந்தார். இதனையடுத்து சாந்தகுமாரை ராணிப்பேட்டை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்