வந்தவாசி அருகே; தீயில் கருகி பெண் சாவு
வந்தவாசி அருகே திருமணமான 1½ ஆண்டில் பெண் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.
வந்தவாசி
வந்தவாசி அருகே திருமணமான 1½ ஆண்டில் பெண் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.
1½ ஆண்டுக்கு முன்பு திருமணம்
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் மோகன். இவரது மனைவி முத்தம்மாள் (வயது 21). இவர்களுக்கு திருமணமாகி 1½ ஆண்டுகள் ஆகிறது. 8 மாதத்தில் ஆண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் கடந்த 15-ந்தேதி முத்தம்மாள் வீட்டில் மண்எண்ணெய் அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது சேலையில் தீப்பற்றியது.
தீ மளமளவென கொழுந்துவிட்டு எரிந்தது. அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தது தீயை அணைத்தனர். இதனையடுத்து அவரை சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தீயில் கருகி சாவு
பின்னர், அங்கிருந்து மேல் சிகிச்்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த முத்தம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து அவரது தாய் சுமதி தெள்ளார் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தீயில் கருகி உயிரிழந்த முத்தம்மாளுக்கு திருமணமாகி 1½ ஆண்டுகளே ஆவதால் செய்யாறு கோட்டாட்சியர் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.