மூன்றாம் பாலினத்தவர்களுக்கான கருத்தரங்கு

மூன்றாம் பாலினத்தவர்களுக்கான கருத்தரங்கு

Update: 2021-07-24 16:22 GMT
துடியலூர் 

சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, காவல்துறை சார்பில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான கருத்தரங்கு கோவையை அடுத்த கவுண்டம்பாளையம் வெள்ளக்கிணர் பிரிவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. 

இதற்கு மாவட்ட சமூல நல அலுவலர் தங்கமணி தலைமை தாங்கி பேசும் போது, தற்போது புதிதாக தொழில் தொடங்க குழுக்கள் மூலம் கடன் வழங்க ஏற்பாடு செய்யப்படும். அதற்கு நீங்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.

இதில்,பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜ பாண்டியன் பேசும்போது, காவல்துறை உங்களுக்கு பல்வேறு உதவிக ளை செய்ய தயாராக உள்ளோம். 


ஓட்டுனர் உரிமம் எடுப்பதற்கும், அவரவர் கல்வித்தகுதிக்கு ஏற்ப தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பை பெற்று தரவும், நீங்கள் சுயதொழில் செய்ய தேவையான உதவிகளை செய்யவும் தயாராக உள்ளோம் என்றார்.

அதைத்தொடர்ந்து ரேஷன் கார்டு இல்லாத மூன்றாம் பாலினத்தவர்க ளுக்கு கொரோனா நிவாரண நிதி 2-வது தவணை ரூ.2 ஆயிரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

இதில் 160-க்கும் அதிகமான திருநங்கைகள் கலந்து கொண்டு தங்களுடைய குறைகளை தெரிவித்தனர்.

திருநங்கைகள் மேம்பாடு குறித்து துடியலூர் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னம், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாண்டியம்மாள், நடராஜன் ஆகியோர் பேசினர். 


இதில், தென்னிந்திய திருநங்கை கூட்டமைப்பு இணை செயலாளர் சுபிக்ஷா ஒருங்கிணைப்பாளராக இருந்து அதிகாரிகளிடம் கேள்வி கேட்டார். 

மேலும் செய்திகள்