வத்தலக்குண்டுவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம்
வத்தலக்குண்டுவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
வத்தலக்குண்டு:
வத்தலக்குண்டுவில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க கோரியும், நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு கட்சியின் நில மீட்பு இயக்க மாநில துணைச்செயலாளர் உலகநம்பி தலைமை தாங்கினார். மாவட்டநிர்வாகிகள் திருச்சித்தன், திருமாசெழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கட்சி நிர்வாகிகள் சுந்தர், சவரி அம்மாள், செல்வம், மூக்கையா, ராஜ்வளவன், இலக்கியன் உள்பட பலர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டனர்.