மீண்டும் செயல்பட தொடங்கிய உழவர்சந்தை

அருப்புக்கோட்டையில் உழவர்சந்தை மீண்டும் செயல்பட தொடங்கியது.

Update: 2021-07-23 19:48 GMT
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை பழைய பஸ் நிலையம் அருகே உழவர்சந்தை செயல்பட்டு வந்தது. இந்தநிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில்  உழவர்சந்தை மூடப்பட்டது. 
பல நாட்களாக மூடப்பட்டு இருந்த உழவர் சந்தை தற்போது கொரோனா பரவல் வெகுவாக குறைந்ததால் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது. 
இதனால் ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். 
உழவர் சந்தைக்கு வரும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர். மீண்டும் செயல்பட தொடங்கிய உழவர் சந்தையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்