பட்டாசு வியாபாரி தற்கொலை
சிவகாசி அருகே பட்டாசு வியாபாரி தற்ெகாலை செய்து கொண்டார்.
சிவகாசி,
சிவகாசி அருகே சாட்சியாபுரம் காமராஜர் நகரைச்சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது55). பட்டாசுகளை வாங்கி சில்லரை வியாபாரிகளுக்கு விற்பனை செய்துவந்தார். இந்த தொழிலில் நஷ்டம் அடைந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் ரவிச்சந்திரனுக்கு சர்க்கரை வியாதி மற்றும் மாரடைப்பு ஏற்பட்டு அதற்காக அவர் அறுவை சிகிச்சை செய்துள்ளார். இதனால் மன வேதனையில் இருந்த அவர் அனுப்பன்குளம் அகதிகள் முகாம் அருகே உள்ள ரேஷன் கடை முன்பு குருணை மருந்து சாப்பிட்டு (விஷம்) உயிரிழந்தார். இதுகுறித்து கிடைத்த தகவலின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.