ம.தி.மு.க.வினர் தபால் நிலையத்தில் மனு அளித்து போராட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்கக்கோரி குத்தாலத்தில் ம.தி.மு.க.வினர் தபால் நிலையத்தில் மனு அளித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குத்தாலம்:
பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்கக்கோரி குத்தாலத்தில் ம.தி.மு.க.வினர் தபால் நிலையத்தில் மனு அளித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மனு அனுப்பும் போராட்டம்
குத்தாலத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்கக்கோரி பிரதமருக்கு மனு அனுப்பும் போராட்டம் நடந்தது. பெட்ரோல் விலை ரூ.100-க்கு மேலும், டீசல் விலை ரூ.98-க்கு மேலும் உயர்ந்துள்ளதை கண்டித்து குத்தாலம் துணை அஞ்சலகத்தில் ம.தி.மு.க. மாநில மாணவர் அணி துணை செயலாளர் ஆசைத்தம்பி தலைமையில் கோரிக்கைகள் அடங்கிய மனுவை துணை அஞ்சலக பெட்டியில் பொட்டு, மாவட்ட செயலாளர் மோகன் போராட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதில் மாநில கொள்கை விளக்க அணி துணை செயலாளர் அழகிரி, குத்தாலம் மேற்கு ஒன்றிய செயலாளர் வாசு, குத்தாலம் பேரூர் செயலாளர் கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கோஷங்கள்
நிகழ்ச்சியில் முன்னாள் பேரூராட்சி மன்ற கவுன்சிலர் சுவாமிநாதன், பேரூர் துணை செயலாளர் முருகேசன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் தமிழ்வாணன் ஆகியோர் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை குத்தாலம் வர்த்தக சங்க தலைவர் தங்கப்பன் செய்திருந்தார்.