வாகனம் மோதி முன்னாள் கிராம உதவியாளர் பலி

வாகனம் மோதி முன்னாள் கிராம உதவியாளர் பலி

Update: 2021-07-23 17:46 GMT
விராலிமலை, ஜூலை.24-
விராலிமலை தாலுகா பேராம்பூர் கல்லுப்பட்டியைச் சேர்ந்தவர் திருமலை (வயது 62). ஓய்வு பெற்ற கிராம உதவியாளரான இவர் நேற்று சொந்த வேலை காரணமாக விராலிமலைக்கு மோட்டார் சைக்கிளில் வந்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு செல்வதற்காக விராலிமலை-கீரனூர் சாலை குளத்தாத்துப்பட்டி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் திருமலை ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்