விழுப்புரம் மாவட்டத்தில் புகையிலை பொருட்களை விற்ற 40 பேர் கைது
விழுப்புரம் மாவட்டத்தில் புகையிலை பொருட்களை விற்ற 40 பேர் கைது செய்யப்பட்டனா்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக கண்டாச்சிபுரத்தை சேர்ந்த முருகன் (வயது 41),
வளவனூர் குமாரகுப்பத்தை சேர்ந்த சீனிவாசன் (43), தமிழ்மாறன் (54), விழுப்புரத்தை சேர்ந்த சக்திவேல் (54), செஞ்சி பெலாக்குப்பத்தை சேர்ந்த பழனி (29), செஞ்சி கிருஷ்ணாபுரம் ஞானதுரை (49), மரக்காணம் பன்னீர்செல்வம் (30), விழுப்புரம் நரசிங்கபுரம் மணிகண்டன் (32) உள்ளிட்ட 40 பேரை போலீசார் கைது செய்தனர்.
கைதான அவர்கள் 40 பேரிடம் இருந்தும் 500 பாக்கெட் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.