வேன் கவிழ்ந்து வியாபாரி சாவு

ஓசூரில் வேன் கவிழ்ந்து வியாபாரி இறந்தார்.

Update: 2021-07-23 16:44 GMT
ஓசூர்:
மத்திய பிரதேச மாநிலம் போலே மாவட்டத்தை சேர்ந்தவர் உஸ்தப் என்கிற மோகன்லால் (வயது 50). இவர் பெங்களூரு அருகே பொம்மசந்திரா பகுதியில் தங்கி பிளாஸ்டிக் நாற்காலி வியாபாரம் செய்து வந்தார். சம்பவத்தன்று இவரும், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த வினோத்குமார் (20) என்பவரும் ஒரு சரக்கு வேனில் ஓசூர் நோக்கி வந்தனர். அந்த வேனை ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ராகேஷ் (25) என்பவர் ஓட்டி சென்றார். ஓசூர் தர்கா பஸ் நிறுத்தம் அருகே வந்த போது, வேனின் பின்புற டயர் வெடித்தது. இதில் நிலை தடுமாறி வேன் கவிழ்ந்தது. இந்த விபத்தில் உஸ்தப், வினோத்குமார், டிரைவர் ராகேஷ் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை, அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே உஸ்தப் பரிதாபமாக உயிரிழந்தார். வினோத்குமாரும், ராகேசும் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து ஓசூர் சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்