கோவில்பட்டி அ.ம.மு.க. நிர்வாகி அ.தி.மு.க.வில் இணைந்தார்

கோவில்பட்டி அ.ம.மு.க. நிர்வாகி அ.தி.மு.க.வில் இணைந்தார்

Update: 2021-07-23 15:16 GMT
கோவில்பட்டி:
கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நேற்று அ.ம.மு.க. மாநில மருத்துவ அணி இணைச் செயலாளர் கோசல்ராம் அ.தி.மு.க .வில் இணையும் நிகழ்ச்சி நடந்தது. முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ., எஸ்.பி. சண்முகநாதன் ஆகியோர் முன்னிலையில் அ.தி.மு.க.வில் அவர் இணைந்தார். அவருக்கு முன்னாள் அமைச்சர்கள் பொன்னாடை அணிவித்தனர். நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட அவைத் தலைவர் திருப்பாற்கடல், கருங்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் லக்ஷ்மண பெருமாள்,  கோவில்பட்டி நகர செயலாளர் விஜய பாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரை பாண்டியன், கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் துணை தலைவர் பழனிச்சாமி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்