பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்

பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-

Update: 2021-07-23 05:36 GMT
சென்னை,

சென்னை குரோம்பேட்டையில் அரிசி வியாபாரி ஆனந்தராஜை, சமூக விரோதிகள் சிலர் மாமூல் கேட்டு பிரச்சினை செய்து, அவரை வெட்டி கொலை செய்துள்ளனர். அவரது மனைவியிடம், துக்கம் விசாரிக்க சென்ற போது வேதனையோடு அவர் சில கருத்துகளை சொன்னார். கொலையாளிகள் தாங்கள் செய்த குற்றத்தை நியாயப்படுத்துவதற்காக ஆனந்தராஜ் மீது பொய்யான குற்றச்சாட்டை சுமத்துவதாக தெரிய வந்துள்ளது. இந்த வழக்கை பொறுத்தமட்டில் உண்மையான குற்றவாளிகளை கண்டறிந்து, அவர்களை சட்டத்தின் முன்பு நிறுத்தி, அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத்தர போலீஸ் கமிஷனர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனந்தராஜின் குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பும் வழங்க வேண்டும்.

இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்