113 பேருக்கு கொரோனா
சேலம் மாவட்டத்தில் புதிதாக 113 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
சேலம்
சேலம் மாவட்டத்தில் புதிதாக 113 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
கொரோனா தொற்று
சேலம் மாவட்டத்தில் தற்போது நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் 119 பேருக்கு தொற்று பாதிப்பு இருந்தது. நேற்று மாவட்டத்தில் 113 பேருக்கு தொற்று பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது.
அதன்படி மாநகராட்சி பகுதியில் 31 பேர் பாதிப்படைந்து உள்ளனர். மேச்சேரியில் ஒருவர், காடையாம்பட்டி, கொளத்தூர், மகுடஞ்சாவடியில் தலா 2 பேர், வீரபாண்டி, நங்கவள்ளியில் தலா 3 பேர், தாரமங்கலம், கொங்கணாபுரத்தில் தலா 4 பேர், எடப்பாடியில் 5 பேர், ஓமலூரில் 14 பேர் பாதிப்படைந்து உள்ளனர். தலைவாசலில் 2 பேர், கெங்கவல்லியில் 3 பேர், அயோத்தியாப்பட்டணம், ஆத்தூரில் தலா 5 பேர் பாதிப்படைந்து உள்ளனர்.
113 பேர்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருந்து சேலத்திற்கு வந்த 5 பேர், ஈரோட்டில் இருந்து வந்த 6 பேர், நாமக்கல்லில் இருந்து வந்த 7 பேர் உள்பட மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 113 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
இதுவரை மாவட்டத்தில் 92 ஆயிரத்து 513 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதில் 89 ஆயிரத்து 352 குணம் அடைந்து உள்ளனர். தற்போது 1,627 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மாவட்டத்தில் தொற்று பாதித்து 1,534 பேர் இறந்து உள்ளனர்.