தாய், மகள் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக தகவல் பரவியதால் பரபரப்பு

காரையூர் அருகே சீருடை, சேலைகள் கிடந்ததால் தாய், மகள் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-07-21 17:58 GMT
காரையூர், ஜூலை.22-
காரையூர் அருகே சீருடை, சேலைகள் கிடந்ததால் தாய், மகள் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சீருடை, சேலைகள்
புதுக்கோட்டை மாவட்டம் காரையூர் அருகே சேரனூர் கிராமத்தை சேர்ந்தவர் சிட்டு. விவசாயியான இவர் அங்குள்ள வெள்ளாற்றின் பாலம் அருகே முட்புதர்களை வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, அங்கு ஒரு குழியில் பள்ளி சீருடை, சேலைகள் புதைந்து கிடந்தன. இதனால் சந்தேகம் அடைந்த அவர் ஊர் மக்களிடம் தெரிவித்தார். இதனை பார்த்த மக்கள் தாய், மகள் கொலை செய்யப்பட்டு  புதைக்கப்பட்டு இருக்கலாம் என சந்தேகம் அடைந்தனர்.
தாய், மகள் கொலை?
இதற்கிடையில் தாய், மகள் கொலை செய்யப்பட்டு  புதைக்கப்பட்டு இருப்பதாக ஊர்முழுவதும் தகவல் பரவியது. பொதுமக்கள் ஏராளமானோர் கூடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து சேரனூர் ஊராட்சி மன்ற தலைவர் காமராஜ் காரையூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து வருவாய் துறையினர் மற்றும் போலீசார் இணைந்து மண்வெட்டியுடன் அந்த பகுதியில் வெட்டி பார்த்தனர். ஆனால் சந்தேகப்படும்படியாக எதுவுமில்லை.
கலைந்து சென்றனர்
எனினும் பொதுமக்கள் மீண்டும் சந்தேகத்தை கிளப்பியதால் பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு அதன்மூலம் அப்பகுதியை ஆழமாக தோண்டி பார்த்தனர். ஆனால் யாரையும் கொன்று புதைத்தற்கான தடயங்கள் இல்லை. ெவறும் துணிகள் மட்டுமே கிடந்தன. இதை போலீசார் உறுதிப்படுத்திய பின்பு, பொதுமக்கள் அனைவரும் நிம்மதி அடைந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்