புகையிலை விற்ற வாலிபர் கைது
சாத்தூரில் புகையிலை விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சாத்தூர்,
சாத்தூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமார் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நல்லான்செட்டிபட்டி கிராமத்தில் பெட்டிக்கடையில் வைத்து புகையிலை விற்ற அதேகிராமத்தை சேர்ந்த ஜெயச்சந்திரன் (வயது 32) என்பவரிடம் இருந்து 7 பாக்கெட் புகையிலையை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.