இடுப்பளவு தண்ணீரில் இறந்தவர் உடலை எடுத்து செல்லும் அவலம்
ஒடுகத்தூர் அருகே இடுப்பளவு தண்ணீரில் இறந்தவர் உடலை எடுத்து செல்கின்றனர். எனவே, பாலம் கட்டித்தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அணைக்கட்டு
ஒடுகத்தூர் அருகே இடுப்பளவு தண்ணீரில் இறந்தவர் உடலை எடுத்து செல்கின்றனர். எனவே, பாலம் கட்டித்தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தடுப்பணை
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா ஒடுகத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்டது கல்லுடை. இந்த பகுதியில் 700-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இந்த பகுதியில் இறந்தவர்களை மயானத்திற்கு எடுத்துச் செல்ல சுமார் 200 மீட்டர் தூரம் வரை காவிரி ஆற்றைக் கடந்து சென்று உடலை அடக்கம் செய்து வந்தனர். இந்த நிலையில் மயானம் எடுத்துச் செல்லும் பாதையில் ஆற்றின் குறுக்கே சுமார் 10 அடி உயரத்துக்கு தடுப்பணை கட்டப்பட்டது.
இந்த நிலையில் கல்லுடை பகுதியைச் சேர்ந்த பட்டம்மாள் என்ற மூதாட்டி ஒருவர் மரணமடைந்தார்.
இடுப்பளவு தண்ணீரில்...
அவரது உடலை அந்த பகுதி மக்கள் உத்திர காவிரி ஆற்றில் இடுப்பளவு தண்ணீரில் நீந்திச் சென்று மயானத்தில் அடக்கம் செய்தனர்.
இதுகுறித்து முன்னாள் கவுன்சிலர் சிவக்குமார் கூறியதாவது:-
இந்த பகுதியில் இறந்தவரின் உடலை உத்திர காவிரி ஆற்றில் நடந்து சென்று அடக்கம் செய்யப்பட்டது. கடந்த காலத்தில் சுமார் 3½ உயரம் தடுப்பணை கட்டி இருந்ததால் பிணத்தை தண்ணீர் எடுத்துச் செல்வதற்கு சிரமம் இல்லை.
ஆனால் தற்போது 10 அடி உயரத்துக்கு தடுப்பணை கட்டப்பட்டுள்ளது.
அதிலிருந்து ஓடும் வெள்ளம் தடுப்பணையில் தேங்கி உள்ளது. இதனால் இறந்தவர்களின் உடலை எடுத்துச் செல்ல முடியாமல் உள்ளது. ஆகவே இந்த பகுதியில் சிறு பாலம் கட்டி தர வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார். .