மதுபாட்டில்கள் கடத்திய வாலிபர் கைது

வாணியம்பாடியில் மதுபாட்டில்கள் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-07-20 16:50 GMT
வாணியம்பாடி

வாணியம்பாடியில் மதுபாட்டில்கள் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த மேட்டுப்பாளையம் பகுதியில் மது பாட்டில்கள் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் வாணியம்பாடி-திம்மாம்பேட்டை சாலையில் தனிப்படை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். ஆட்டோவில் மதுபாட்டில்கள் இருந்தன.

இதனையடுத்து போலீசார் ஆட்டோவில் வந்தவரிடம் விசாரணை நடத்தியதில், மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் ராஜ்மகேஷ் (வயது 30) என்பதும், திம்மாம்பேட்டையில் இருந்து வாணியம்பாடிக்கு 11 அட்டை பெட்டிகளில் 550 மதுபாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக கடத்தி வந்ததும் தெரியவந்தது.

அதைத் தொடர்ந்து போலீசார் ஆட்டோவுடன் மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் ராஜ்மகேசை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்