ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.5¾ லட்சத்துக்கு தேங்காய் ஏலம்
வாடிப்பட்டி அருகே உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய்கள் ரூ.5¾ லட்சத்துக்கு ஏலம் போனது.
வாடிப்பட்டி,ஜூலை
வாடிப்பட்டி அருகே உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய்கள் ரூ.5¾ லட்சத்துக்கு ஏலம் போனது.
மறைமுக ஏலம்
வாடிப்பட்டி அருகே ஆண்டிப்பட்டி ஊராட்சியில் தமிழ்நாடு வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத் துறைக்குட்பட்ட ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் வெள்ளி மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் தேங்காய் ஏலம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று மட்டையுடன் கூடிய தேங்காய்கள் மறைமுக ஏலம் நடந்தது.
இந்த ஏலத்திற்கு விற்பனைக் குழு கண்காணிப்பாளர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். இதில் 18 விவசாயிகள் 64 ஆயிரத்து 370 தேங்காய்களை 36 குவியல்களாக வைத்திருந்தனர்.
அதிகபட்ச விலை
இந்த ஏலத்தில் 14 வியாபாரிகள் கலந்து கொண்டு அதிகபட்ச விலையாக ரூ.13-க்கும், குறைந்தபட்சமாக ரூ.7. 06-க்கும், சராசரியாக ரூ.9.82-க்கும் ஏலம் எடுத்தனர். இதனால் ரூ.5 லட்சத்து 63 ஆயிரத்துக்கு தேங்காய் வியாபாரம் நடந்தது. அதற்குரிய வங்கி காசோலை உடனடியாக பெற்று விவசாயிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
அதேபோல் 3 விவசாயிகளின் 206 கிலோ கொப்பரை தேங்காயினை 5 வியாபாரிகள் கலந்து கொண்டு ரூ.95-க்கு ஏலம் எடுத்தனர். இதனால் ரூ.18 ஆயிரத்து 519-க்கு கொப்பரை தேங்காய் வர்த்தகம் நடந்தது.