தூத்துக்குடி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறிய முன்னாள் ராணுவ வீரர்களுக்கு சிறப்பு சலுகை

தூத்துக்குடி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறிய முன்னாள் ராணுவ வீரர்களுக்கு சிறப்பு சலுகை அறிவிகப்பட்டு உள்ளது

Update: 2021-07-20 14:52 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் வேலைவாய்ப்பு பதிவு செய்த முன்னாள் படைவீரர்கள், தங்கள் பதிவை புதுப்பிக்க தவறி இருந்தால் அவர்களுக்கு சிறப்பு சலுகை அளிக்கப்பட்டு உள்ளது. அதன்படி 01.01.2017 முதல் 31.12.2019 வரை மூன்று ஆண்டுகளுக்கு வேலைவாய்ப்பு புதுப்பிக்க தவறிய முன்னாள் படைவீரர்களுக்கு சிறப்பு சலுகையாக 3 மாதம் காலம் வரை புதுப்பித்துக் கொள்ளலாம். இந்த வாய்ப்பை பயன்படுத்திட தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர்கள், முன்னாள் படைவீரர் நலஉதவி இயக்குநரை நேரில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்