தூததுக்குடியில் போக்சோ சட்டம் குறித்த குறும்படம் அமைச்சர் கீதாஜீவன் வெளியிட்டார்

தூததுக்குடியில் போக்சோ சட்டம் குறித்த குறும்படத்தை அமைச்சர் கீதாஜீவன் வெளியிட்டார்

Update: 2021-07-20 14:29 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு குறும்படம் வெளியிடும் நிகழ்ச்சி தூத்துக்குடியில் நடந்தது. நிகழ்ச்சிக்கு குறும்பட இயக்குனர் பிராட்வே சுந்தர் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். இணை இயக்குனர் அருந்ததி அரசு வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு குறும்படத்தை வெளியிட்டு பேசினார்.
நிகழ்ச்சியில் வக்கீல் செங்குட்டுவன் முருகன், பாப்பா சங்கர், சீலன்ஸ்ருதி, முருகேசன், இளையநிலா சங்கர், தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். சுமங்கலி சதீஷ் நன்றி கூறினார்.
மேலும், தூத்துக்குடி ஸ்பிக்நகர் இன்னர்வீல் கிளப் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ரோட்டரி ஹாலில் நடந்தது. நிகழ்ச்சிக்கு அமைச்சர் கீதாஜீவன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் புதிய நிர்வாகக்குழு தலைவியாக ஜூடி, துணை தலைவியாக டாக்டர் ஆரத்தி கண்ணன், செயலாளராக ரம்யா மாரியப்பன், பொருளாராக லீனா மகிமை, துணை செயலாளராக டாக்டர். புளோரா ஜூவானிற்றா மற்றும் நிர்வாகிகள் கவுசல்யா, நந்ததா ஆகியோர் பி.டி.சி. வெயிலா முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர். கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய ஸ்பிக்நகர் இன்னர்வீல் கிளப்பை சேர்ந்த 4 டாக்டர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள், நலிவடைந்த பெண்கள் மற்றும் முதியோருக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள், தையல் எந்திரங்கள், காலிப்பர்கள், இஸ்திரி பெட்டி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப் பட்டன. தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு ரூ 80 ஆயிரம் மதிப்பில் ஆக்சிஜன் செறிவூட்டி, முழு கவச உடை, முககவசம், கையுறை வழங்கப்பட்டது.
விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் மூலிகை செடிகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் கிளப் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்