மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
செங்கம் தாலுகா அலுவலக வளாகத்தில் அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
செங்கம்
செங்கம் தாலுகா அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
செங்கம் தாலுகா அலுவலக வளாகத்தில் அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை வழங்க வேண்டும், மாற்றுத்திறனாளிகள் சான்றிதழ் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
அதைத் தொடர்ந்து தாசில்தார் மனோகரன், மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுகொண்டார்.
மேலும் மாற்றுத்திறனாளிகள் முன்வைத்த கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.