நாய் குறுக்கே வந்ததால் விபத்து கார் கவிழ்ந்து வாலிபர் காயம்

நாய் குறுக்ேக வந்ததால் ஏற்பட்ட விபத்தில் கார் கவிழ்ந்து வாலிபர் காயம் அடைந்தார்.

Update: 2021-07-20 11:50 GMT

வேடசந்தூர்:
திண்டுக்கல் மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் நூருல்அமீன் (வயது 29). இவர் பக்ரீத் பண்டிகையையொட்டி நேற்று மாலை கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியில் ஆடு வாங்குவதற்காக தனது காரில் புறப்பட்டு சென்றார். திண்டுக்கல்-கரூர் 4 வழிச்சாலையில் வேடசந்தூர் அடுத்த தம்மணம்பட்டி பிரிவு அருகே கார் சென்று கொண்டிருந்தபோது ஒரு நாய் குறுக்கே வந்தது. இந்த நாய் மீது மோதாமல் இருப்பதற்காக  நூருல்அமீன் காரை திருப்பினார். அப்போது கார் திடீர் என்று எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து சென்டர்மீடியனில் மோதி கவிழ்ந்தது.
இதில் நூருல்அமீனுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். விபத்து குறித்து வேடசந்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்