தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு வாரத்தில் 37 ரவுடிகள் மீது நடவடிக்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு வாரத்தில் 37 ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தெரிவித்து உள்ளார்.

Update: 2021-07-20 11:05 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு வாரத்தில் 37 ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
கண்காணிப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் குற்ற செயல்களை தடுக்கும் வகையில் அனைத்து துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைத்து சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவிட்டார். அதன்பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதனால் கடந்த ஒருவாரத்தில் பல்வேறு கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளில் ஈடுபட்ட 37 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
நடவடிக்கை
அதன்படி கொலை, கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்ட 11 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர். தென்பாகம் போலீசார் 7 ரவுடிகளை கைது செய்து ஜெயிலில் அடைத்து உள்ளனர். இது தவிர தென்பாகம் போலீஸ் நிலையத்தில் 3 ரவுடிகள், வடபாகம் போலீஸ் நிலையத்தில் 4, முத்தையாபுரம் போலீஸ் நிலையத்தில் 5, எட்டயபுரம் போலீஸ் நிலையத்தில் 1, ஏரல் போலீஸ் நிலையத்தில் 1, மெஞ்ஞானபுரம் போலீஸ் நியைலத்தில் 1, நாசரேத் போலீஸ் நிலையத்தில் 2, சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் 2 ஆக மொத்தம் 19 ரவுடிகள் மீது குற்ற விசாரணை நடைமுறைச் சட்டப்பிரிவு 107 மற்றும் 110 ஆகியவற்றின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
மேலும் கூலிப்படை, ரவுடிகள், போதை பொருள் கடத்தல் மற்றும் விற்பனை போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்