போதைக்காக, வலி மாத்திரையை தண்ணீரில் கலந்து ஊசி மூலம் உடலில் செலுத்திய வாலிபர் கைது

போதைக்காக, வலி மாத்திரையை தண்ணீரில் கலந்து ஊசி மூலம் உடலில் செலுத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-07-19 22:34 GMT
சேலம்:
சேலம் அம்மாபேட்டை போலீசார் உடையாப்பட்டி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை சந்தேகத்தின் பேரில் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். 
அப்போது ஒரு வாலிபர் போலீசாரிடம் இருந்து நைசாக தப்பித்து ஓடினார். மற்றொரு வாலிபர் நஞ்சம்பட்டி பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமார் (வயது 25) என்பது தெரியவந்தது. மேலும் அவரிடம் சோதனை செய்த போது கஞ்சா பொட்டலம் மற்றும் 20 வலி மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் விசாரணையில், இந்த மாத்திரைகளை அவர்கள் போதைக்கு பயன்படுத்தி வந்துள்ளனர். மாத்திரையை அவர்கள் தண்ணீரில் கலந்து ஊசி மூலம் உடலில் செலுத்தி வந்ததாகவும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரது கூட்டாளியை போலீசார் தேடி வருகின்றனர். 

மேலும் செய்திகள்