மேட்டூர் புதிய அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தம்

மேட்டூர் புதிய அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

Update: 2021-07-19 22:34 GMT
மேட்டூர்:
மேட்டூரில் 600 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட புதிய அனல் மின் நிலையமும், 840 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட பழைய அனல் மின் நிலையமும் இயங்கி வருகின்றன. தற்போது தமிழகத்தில் மின் தேவை குறைந்துள்ளதால், புதிய அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி நேற்று முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. 
இதேபோல் பழைய அனல் மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 4 யூனிட்டுகளில், நிர்வாக காரணங்களுக்காக 1 மற்றும் 3-வது யூனிட்டுகளில் மட்டுமே மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. அதாவது 840 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட பழைய அனல் மின் நிலையத்தில் தற்போது 420 மெகாவாட் மட்டுமே மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்