கர்நாடகத்தில் பி.யூ.சி. 2-ம் ஆண்டு மாணவர்களுக்கான மதிப்பெண் இன்று வெளியீடு

கர்நாடகத்தில் பி.யூ.சி. 2-ம் ஆண்டு மாணவர்களுக்கான மதிப்பெண் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியாகும் என்று பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் கூறினார்.

Update: 2021-07-19 21:26 GMT
மந்திரி சுரேஷ்குமார்.
பெங்களூரு: கர்நாடகத்தில் பி.யூ.சி. 2-ம் ஆண்டு மாணவர்களுக்கான மதிப்பெண்  இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியாகும் என்று பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் கூறினார்.

கொரோனா பரவல்

கர்நாடக பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார், நேற்று பெங்களூருவில் உள்ள சில எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு மையங்களுக்கு நேரில் வந்து ஆய்வு செய்தார். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் கொரோனா பரவல் காரணமாக பி.யூ.சி. 2-ம் ஆண்டு தேர்வு ரத்து செய்யப்பட்டது. அந்த மாணவர்களுக்கு எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பி.யூ.சி. முதலாம் ஆண்டில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மதிப்பெண்கள் கணக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த பணிகள் தற்போது நிறைவு பெற்றுள்ளன. இதையடுத்து பி.யூ.சி. 2-ம் ஆண்டு மதிப்பெண்கள் நாளை (அதாவது இன்று) மாலை 4.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. அனைத்து மாணவர்களும் தேர்ச்சி செய்யப்படுகிறார்கள்.
இவ்வாறு மந்திரி சுரேஷ்குமார் கூறினார்.

தொழிற்படிப்புகள்

கர்நாடகத்தில் தொழிற்கல்வி படிப்புகளுக்கு நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. அதில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தான் தொழிற்படிப்புகளில் சேர்க்கை நடத்தப்படுகிறது. 
ஆனால் இந்த ஆண்டு இந்த பி.யூ.சி. 2-ம் ஆண்டு மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படாது என்று அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. அதே நேரத்தில் டிகிரி கல்லூரிகளில் இந்த மதிப்பெண் அடிப்படையில் தான் சேர்க்கை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்