டிஜிட்டல் பேனரை அவமதித்தவர் கைது
கடையநல்லூரில் டிஜிட்டல் பேனரை அவமதித்தவரை போலீசார் கைது செய்தனர்.
கடையநல்லூர்:
கடையநல்லூர் செவல்விளை 3-வது தெருவைச் சேர்ந்தவர் முப்பிடாதி சாமி (வயது 53). இவர் கடையநல்லூரில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவர் தனது கடையின் முன்பு பா.ஜனதா சார்பில் வைக்கப்பட்டு இருந்த டிஜிட்டல் பேனரை அகற்றி அவமதித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில், கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முப்பிடாதி சாமியை கைது செய்தனர்.
இதேபோன்று அனுமதியின்றி டிஜிட்டல் பேனர் வைத்ததாக பா.ஜ.க.வினர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.