கண்மாய்களை தூர்வார வேண்டும்

கண்மாய்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Update: 2021-07-19 19:53 GMT
அருப்புக்கோட்டை,
கண்மாய்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. 
ஒன்றியக்குழு கூட்டம் 
அருப்புக்கோட்டை ஒன்றியக்குழுவின் சாதாரண கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக் குழுத் தலைவர் சசிகலா பொன்ராஜ் தலைமையில் நடைபெற்றது. 
ஒன்றியக்குழு துணைத்தலைவர் உதயசூரியன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சூரியகுமாரி, ரவிக்குமார், மேலாளர் பத்மினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர் தங்களது கோரிக்கைகள் குறித்து கூறினர். அதன் விவரம் வருமாறு:- 
 சீனிவாசன்:-
கவுன்சிலர்களுக்கு வழங்கப்படும் படி மிக குறைவாகவே இருக்கிறது. எனவே உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 
கருவேல மரங்கள் 
 கோவிந்தசாமிநாதன்:- பாளையம்பட்டி ஊராட்சியில் உள்ள 4 கண்மாய்களிலும் கருவேல மரங்கள் வளர்ந்தும், பாசிகள் படர்ந்து பயன்பாடற்று கிடக்கிறது. தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். 
தலைவர் சசிகலா பொன்ராஜ்:- அதிகாரிகளை பார்வையிட செய்து கண்மாய்கள் தூர்வாரும் பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். 
வாழவந்தராஜ்: ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் போதிய அலுவலக உதவியாளர்கள் இல்லை. ஆதலால் ஒரு சில பணிகளை நாங்களே செய்ய வேண்டியுள்ளது.  
வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிக்குமார்:- இனி இதுபோன்ற தவறுகள் நிகழாதவாறு பார்த்து கொள்கிறோம். 
இவ்வாறு கூட்டத்தில் கலந்து கொண்ட கவுன்சிலர்கள் பல்வேறு கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தினர்.

மேலும் செய்திகள்