மேலும் 20 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 45,294 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 44,395 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 39 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 362 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நோய் பாதிப்புக்கு யாரும் பலியாக வில்லை. அரசு ஆஸ்பத்திரிகளில் 219 பேரும் சிகிச்சை மையங்களில் 13 பேரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.