22 பேருக்கு கொரோனா தொற்று
22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
சிவகங்கை, ஜூலை.
சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 22 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் இம்மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 515ஆக உயர்ந்துள்ளது. நேற்று 31 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.
இம்மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை மற்றும் வீட்டு தனிமையில் சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 387ஆக உள்ளது.