திருநங்கைகளுக்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம்

திருநங்கைகளுக்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.

Update: 2021-07-19 18:43 GMT
கரூர்
கரூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நேற்று திருநங்கைகள் வாழ்க்கை தரத்தை முன்னேற்றுவதற்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதற்கு கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் தலைமை தாங்கி, திருநங்கைகளுக்கு அரசால் சமூக நலத்துறை மூலம் வழங்கப்படும் நலத்திட்டங்கள், அரசு வேலை வாய்ப்பில் உள்ள முன்னுரிமைகள், சமூகத்தில் மதிப்பு மிக்கவர்களாக உயர கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் மற்றும் அவர்களின் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு சம்பந்தமாக அறிவுரை வழங்கினார். இதில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு தேவராஜ், மனநல மருத்துவர் பாரதி கிருத்திகா, வட்டார போக்குவரத்து அலுவலர் ஆனந்த், மாவட்ட திட்ட அலுவலர் கிருஷ்ணன், பாதுகாப்பு அலுவலர் பார்வதி, திருநங்கைகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்