ஆரணியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்கக்கோரி ஆர்ப்பாட்டம்

ஆரணியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2021-07-19 17:57 GMT
ஆரணி

திருவண்ணாமலை மாவட்டத்தை 2 ஆக பிரித்து ஆரணியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டமாக அறிவிக்கக்கோரி ஆரணி தாலுகா அலுவலகம் முன்பு ஆரணி ஒருங்கிணைந்த இளைஞர் நல சங்க தலைவர் ராஜேஷ் தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இதில் வக்கீல் தரணி காசிநாதன், அவைத்தலைவர் டில்லிபாபு, செயலாளர் குணசேகரன், பொருளாளர் சரவணன், மகளிரணி தலைவி பவித்ரா, பொதுக்குழு நிர்வாகிகள், செயற்குழு நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

பின்னர் கோரிக்கைகள் அடங்கிய மனுவினை சேவூர் எஸ்.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., ஆரணி தாசில்தார் செந்தில்குமார், வருவாய் கோட்டாட்சியர் ஆகியோரிடம் வழங்கினர்.

மேலும் செய்திகள்