குரங்கு அருவியில் சுற்றுலா பயணிகளை கவரும் ஓவியங்கள்

குரங்கு அருவியில் சுற்றுலா பயணிகளை கவரும் ஓவியங்கள்

Update: 2021-07-19 17:48 GMT
பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் குரங்கு அருவி அமைந்து உள்ளது. இந்த அருவிக்கு வால்பாறை சக்தி எஸ்டேட் மற்றும் வனப்பகுதியில் பெய்யும் மழையின் மூலம் நீர்வரத்து உள்ளது. 

தற்போது அருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. தற்போது இந்த அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி இல்லை. 

இதற்கிடையே சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் அங்கு தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும் மான், வரையாடுகளின் ஓவியங்கள் சுவற்றில் தத்ரூபமாக வரையப்பட்டு உள்ளன. 

மேலும் செய்திகள்