ஊட்டி,
ஊட்டி ஏரியில் நேற்று ஆண் பிணம் மிதப்பதாக நகர மேற்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் நடத்திய விசாரணையில் அவர் தலைகுந்தாவை சேர்ந்த விவசாயி ராஜன் (வயது 65) என்பதும், குத்தகைக்கு வாங்கி விவசாயம் செய்த நிலத்தில் போதிய விளைச்சல் கிடைக்காததால் விரக்தி அடைந்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. எனினும் வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என்று போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.