தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி:
தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் தர்மபுரி மாவட்ட கிளை சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் மாதையன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர்கள் ராஜகோபால், முருகேசன், மாவட்ட துணை செயலாளர் பச்சா கவுண்டர் ஆகியோர் முன்னிலை வைத்தனர். மாவட்ட செயலாளர் பிரதாபன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் மணி கோரிக்கைகள் குறித்து பேசினார். காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும். தென்பெண்ணை ஆற்றின் கிளை நதியான மார்க்கண்டேய நதியில் தடுப்பணை கட்டிய கர்நாடக அரசு மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விலை உயர்வை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் மாதையன், கிருஷ்ணன், சாக்கன், முருகன், ராமச்சந்திரன், சரவணன் உள்பட விவசாய தொழிலாளர்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.