நெடுஞ்சாலைத்துறை பெண் என்ஜினீயர் வீட்டில் 5 பவுன் நகை, 6 லட்சம் திருட்டு

நெடுஞ்சாலைத்துறை பெண் என்ஜினீயர் வீட்டில் 5 பவுன் நகை, 6 லட்சம் திருட்டு

Update: 2021-07-19 16:03 GMT
கருமத்தம்பட்டி

நெடுஞ்சாலைத்துறை பெண் என்ஜினீயர் வீட்டில் 5½ பவுன் நகை, ரூ.6 லட்சம் திருடப்பட்டது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது 

பெண் என்ஜினீயர்

கோவையை அடுத்த சூலூர் ஜி.கே.எஸ்.நகரை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது47). இவர் மின்சார வாரியத்தில் மின் ஆய்வாளராக பணியாற்று கிறார். இவருடைய மனைவி தனலட்சுமி (42). 

இவர் திருப்பூர் மாவட்ட நெடுஞ்சாலை துறை உதவி என்ஜினீயராக பணியாற்றுகிறார். 

இவர்கள், கடந்த 17-ந் தேதி தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்து டன் ஈரோட்டில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றனர். அவர்கள், நேற்று முன்தினம் இரவு ஈரோட்டில் இருந்து திரும்பி வந்தனர்.

நகை, பணம் திருட்டு

அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், வீட்டிற்குள் சென்று பார்த்த போது 2 பீரோக்களை உடைத்து அதில் இருந்த ரூ.6 லட்சம் பணம் மற்றும் 5½ பவுன் நகைகள் திருடப்பட்டது தெரிய வந்தது.

இது குறித்த தகவலின் பேரில் சூலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

 மேலும் கைரேகை நிபுணர்கள் வந்து அங்கு பதிவாகியிருந்த தடயங்களை பதிவு செய்தனர்.

இது குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வீட்டின் கதவை உடைத்து பணம், நகைகளை திருடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்