தூத்துக்குடியில் தந்தை, மகனுக்கு கத்திக்குத்து 4 வாலிபர்கள் கைது
தூத்துக்குடியில் தந்தை, மகனை கத்தியால் குத்திய 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்
தூத்துக்குடி:
தூத்துக்குடி அமுதாநகரை சேர்ந்தவர் மாசிலாமணி (வயது 69). இவர் தனது வீட்டின் அருகே ஆடுகளை மேய்த்துக் கொண்டு இருந்தாராம். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த செல்லத்துரை மகன் ரஞ்சித்குமார் (26) என்பவர் ஆடுகளை கல்லை வீசி விரட்டினாராம். இதனை மாசிலாமணி சத்தம் போட்டு உள்ளார். இதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, ரஞ்சித்குமார், தனது நண்பர்கள் கார்த்திக் (21), கணபதி (20), சிவபாலன் (22) ஆகியோருடன் சேர்ந்து மாசிலாமணி, அவரது மகன் செல்வக்குமார் (38) ஆகியோரை கத்தியால் குத்தி, கொலை மிரட்டல் விடுத்தார்களாம்.
இது குறித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர்.